வெக்கை vs அசுரன்
இன்று வெக்கை புதினத்தை இரண்டாம் முறை படித்துமுடித்தேன். வாசித்துமுடித்த பிறகு அசுரன் படத்தில் வரும் காட்சிகளை யோசித்து பார்த்தேன்.வெக்கை நாவல் ஆனது நிலம் அபகரிப்பு பற்றியது ஆகும். பூமணி அவர்கள் எந்த இடத்திலும் தீண்டாமை பற்றி பேசவில்லை. இந்த புதினம் பள்ளர்கள் என்ற ஒரு பிரிவினர்களை பற்றிய கதையே ஆகும். யார் பள்ளர்கள் ? மள்ளர்கள் என்றும் பெயர் உடையவர்கள் . "மள்ளன் " என்றால் மிகுந்த பலம் உடைய தேகங்களை உடையவர்கள் என்றும் பொருள். பள்ளர்கள் வயலும் வயல் சார்ந்த இடத்தில் (மருதம்) வசிப்பவர்கள். தெலுங்கர்கள் படையெடுத்து வரும் வரைக்கும் தமிழகத்தில் நிலவுடைமை சாதியாகத்தான் பள்ளர்கள் இருந்திருக்கிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டு பிறகுதான் பஞ்சம் வந்ததால் அடித்தள மக்கள் ஆனார்கள். பள்ளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் இல்லை நிலம் இழந்ததால் சமுதாயத்தில் கீழே தள்ளப்பட்டவர்கள். வெக்கை நாவலில் தீண்டாமை பற்றியோ சாதி கொடுமை பற்றியோ பேசப்படவில்லை, பறிக்கப்பட்ட நிலமும் அதை மீட்பதற்கான போராட்டத்தை பற்றியதே வெக்கை நாவல். ஆனால் அசுரன் படத்தில் காணப்படும் சில காட்சிகள் சா...