தி. ஜா வின் அம்மணி போன்ற பெண்ணை பார்ப்பது மிக அரிது. மிகவும் வித்யாசமான பெண். மிருகங்கள் கூட இப்பிடி ஒரு வாழ்க்கை வாழுமா என்று சந்தேகம்தான். அம்மணிக்கு சரி தவறு என்று கிடையாது. எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும். கல்யாணம் என்றால் ஆகாது. கோபம் வந்தால் சிரிப்பு, துக்கம் வந்தால் சிரிப்பு, எது நடந்தாலும் சிரிப்பு. எல்லோரையும் தொட்டு பார்க்க வேண்டும், எல்லோரையும் கட்டியணைக்க வேண்டும். மார்க்சிசம் , கம்யூனிசம் படித்ததால் கடவுள் மேல் நம்பிக்கை இல்லை.அன்னவாசலில் பள்ளி படிப்பு , பிறகு பெரியப்பா-பெரியம்மா வீட்டில் இருந்து கொண்டு பி.எ ஹிஸ்டரி. ஒரு ஏவுகணை ஆனது எப்படி வானில் செல்லும்போது ஒவ்வொரு பாகமாக கழட்டிவிட்டு செல்கிறதோ அதே மாதிரி அம்மணியும் ஒவ்வொரு பருவதிலும் தன்னுடைய சொந்தங்களை கழட்டிவிட்டுக்கொன்றே செல்கிறாள். கோபாலி என்கிற 40 வயது பாட்டு விதவான் மேல் முதல் முதலாய் காதல் வயப்படுகிறாள். கோபாலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கிறது. இப்போது இருக்கும் பாப் ஸ்டார்ஸ்க்கு எப்படி பெண் ரசிகைகள் இருக்கிறார்களோ அதே மாதிரி கோபாலி கச்சேரிக்கும் ரசிகைகள் உண்டு.ஆகையால் கோபாலிக்க...