மரப்பசு - தி. ஜா
தி. ஜா வின் அம்மணி போன்ற பெண்ணை பார்ப்பது மிக அரிது. மிகவும் வித்யாசமான பெண். மிருகங்கள் கூட இப்பிடி ஒரு வாழ்க்கை வாழுமா என்று சந்தேகம்தான். அம்மணிக்கு சரி தவறு என்று கிடையாது. எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும். கல்யாணம் என்றால் ஆகாது. கோபம் வந்தால் சிரிப்பு, துக்கம் வந்தால் சிரிப்பு, எது நடந்தாலும் சிரிப்பு. எல்லோரையும் தொட்டு பார்க்க வேண்டும், எல்லோரையும் கட்டியணைக்க வேண்டும். மார்க்சிசம் , கம்யூனிசம் படித்ததால் கடவுள் மேல் நம்பிக்கை இல்லை.அன்னவாசலில் பள்ளி படிப்பு , பிறகு பெரியப்பா-பெரியம்மா வீட்டில் இருந்து கொண்டு பி.எ ஹிஸ்டரி. ஒரு ஏவுகணை ஆனது எப்படி வானில் செல்லும்போது ஒவ்வொரு பாகமாக கழட்டிவிட்டு செல்கிறதோ அதே மாதிரி அம்மணியும் ஒவ்வொரு பருவதிலும் தன்னுடைய சொந்தங்களை கழட்டிவிட்டுக்கொன்றே செல்கிறாள். கோபாலி என்கிற 40 வயது பாட்டு விதவான் மேல் முதல் முதலாய் காதல் வயப்படுகிறாள். கோபாலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கிறது. இப்போது இருக்கும் பாப் ஸ்டார்ஸ்க்கு எப்படி பெண் ரசிகைகள் இருக்கிறார்களோ அதே மாதிரி கோபாலி கச்சேரிக்கும் ரசிகைகள் உண்டு.ஆகையால் கோபாலிக்கு பெண் சபலமும் உண்டு. அம்மணியை மேற்படிப்பு படிக்க வைக்கிறேன் பாட்டு படிக்கவைக்கிறேன் என்று மெட்ராஸில் ஒரு வீட்டில் குடி வைக்கிறார் கோபாலி. அங்கிருந்து மாறுகிறது அம்மணியின் வாழ்க்கை. அவள் வாழ நினைப்பதை வாழ்கிறாள். இந்த நாவலில் எல்லாம் வெளிப்படையாக சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் அம்மணி ஒரு ப்ராமண குளத்தில் பிறந்த ஒரு வேசியாக வாழ்கிறாள். மனிதர்களை அம்மணி போன்று நேசிக்கவும் முடியாது, உதறித்தள்ளவும் முடியாது. அனால் அப்படிப்பட்ட அம்மணி ஒரே ஒருவன் மீது மட்டும் தன்னை அறியாமல் ஒரு ஓரத்தில் காதல் கொள்கிறாள், காதல் என்று சொல்லமுடியாது அனால் காதல்தான், அப்பிடி ஒரு விசித்திரமான பீலிங் என்றுதான் சொல்லமுடியும். விசித்திரமான பெண்களுக்கு மட்டும் வரக்கூடிய பீலிங். அந்த அம்மணி மனதை கொள்ளையடித்தவன் பட்டாபி என்ற பையன். ஊர் ஊராக சுத்துகிறாள். அவள் போகும் இடங்களில் இருக்கும் மனிதர்களையெல்லாம் தன் இஷ்டப்படி கட்டியணைத்துக்கொள்கிறாள். கடைசியில் எங்கு போனலும் பட்டாபி போல இல்லை என்று தெரிந்து அவனுக்காக உருகி கடிதம் எழுதுகிற மாதிரி கதை முடிகிறது. முடிவாக இக்கதை feminism பேசுகிறது என்று சொல்ல முடியாது , அதையெல்லாம் தாண்டி அம்மணியின் மனது எதையோ நோக்கி நகர்கிறது. 2050 ஆம் வருடத்தில் அம்மணி போல பெண்களை பார்க்க நேரிடலாம் என்றுதான் சொல்லலாம்.
Super
ReplyDelete