சோளகர் தொட்டி - sa.balamurugan



Image may contain: 1 person, standing, text and outdoor
நரகம் என்றதும் நமது கற்பனை எவ்வளவு தூரம் செல்ல நேரிடுமோ அதை விட பல மடங்கு கடந்து நிற்கிறது சோளகர் தொட்டி மக்களின் நிலைமை. அதிக மன கனத்தோடு கையில் சுமந்து படித்த புத்தகம் இது, மனதில் வேதனைகள் சூழ்ந்துகொண்டதால், தெடர்ந்து படிக்கமுடியாமல் பாதியுடன் நிறுத்திவிட்டேன். நாவல் கொடுமையின் உச்சத்தை நம்மிடையே நகர்த்திச் செல்லும் போது, தொடர்ந்து படிக்க முடியாமல் மனம் தள்ளாடும்.கடைசி 30 பக்கங்களை மன வலிமையை
ஏற்படுத்திக்கொண்டு படித்துமுடித்தேன்.வீரப்பன் தேடுதல் வேட்டையினால் அவர்கள் பட்ட துன்பங்களைபற்றி இப்புதினம் பேசுகிறது . விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று கணவன் கண்ணெதிரில் கற்பழிக்கப்படுவதும், வீட்டுக்கு வந்ததும் அவள் தீட்டுப்பட்டுவிட்டாள். அவளுடன் இனி வாழ முடியாது என வீட்டை விட்டு துரத்துவதும், விசாரணை அறையில் அடைபட்டு பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணுக்கு உதவி கேட்கப் பயப்பட்டுப் பற்களால் கடித்துத் தொப்புள் கொடியை அறுத்துப் பிரசவம் பார்ப்பதும் என்று இந்த மாதிரி பல கொடூரங்களை கொண்டது இந்த புதினம். இந்த நாவலின் பாதிப்பு கண்டிப்பாக சிறிது நாட்களுக்கு நம்மை விட்டு பிரிந்துச் செல்லாது.இவை எல்லாம் வெறும் கதை என்றோ, ஆசிரியரின் கற்பனை என்றோ சத்தியமாக ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் இதை எழுதிய ச.பாலமுருகன் அவர்கள் அம்மக்களுடன் தங்கி அவர்களுக்காகப் போராடி வரும் மனித உரிமை ஆர்வலர். பாதிக்கபட்ட மக்களின் மூலமாக திரட்டப்பட்ட தகவல்கள் வழியாக எழுதப்பட்டது இந்நூல் என உணர முடிகிறது.

Comments

Popular posts from this blog

யானை டாக்டர்

Έτερος Εγώ (The Other Me)

வெக்கை vs அசுரன்