காதுகள்- MV Venkatraman
"தரித்திரத்துக்கு பசி அதிகம்" என்னை ஈர்த்த வாக்கியம். இந்த கதையில் வரும் மாலி என்கிற மஹாலிங்கத்தின் காதுகள் அவரை படுத்தும் பாடுதான் கதை. இப்புதினம் psychological fiction genre ஐ சேர்ந்தது. Auditory hallucinations (செவிவழி பிரமைகள்) என்று சொல்லக்கூடிய ஒரு மன வியாதியை கொண்ட மாலி படும் பாடு படிக்கும் வாசகர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை படிக்கும் போது என்னுடைய காதுகளிலும் சிலர் பேசுவது போல் கேட்டு அச்சம்கொண்டு, பாதியோடு படிப்பதை நிறுத்தி கொண்டேன். இக்கதையில் காலி தெய்வம் தான் கெட்டவள். காளிதான் மாலி காதுகளில் ஒலி எழுப்பும் கெட்ட சக்தி. கருப்பன்,ராமசாமி, முருகசாமி இதெல்லாம் மாலியின் காதில் வசிக்கும் ஜந்துக்கள்.இக்கதையை MVV தன்னுடைய சுயசரிதை என்கிறார். நேற்று இரவே படித்து முடிக்கவேண்டியது, பயம் சூழ்ந்துகொண்டதால் இன்று காலை படித்துமுடித்தேன்.
Comments
Post a Comment